×

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தேவதானப்பட்டி, பிப். 20: தேவதானப்பட்டி அருகே சிந்துவம்பட்டி தெற்குதெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் விவசாயி ராஜா (36). இவரது வாழைத்தோட்டம் ஜெயமங்கலம் செல்லும் சாலை அருகே உள்ளது. ராஜா நேற்று முன்தினம் வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை 6 மணியளவில் அவரது தந்தை மனோகரன் வாழைத்தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜா மின்மோட்டாரை இயக்க ஸ்சுவிட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Manokaran ,Sindubampati ,Devadanapati ,Jeyamangalam ,Mundinam ,plantation ,Dinakaran ,
× RELATED கெடார் அருகே நள்ளிரவில் நகை கடை ஷட்டரை...