- அழகப்பா பல்கலைக்கழகம்
- காரைக்குடி
- காஞ்சிவனக் கருப்பன் தென்னாடு வந்த கதை
- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக செய்தித் துறை
- பல்கலைக்கழக பதிவாளர்
- டாக்டர்
- எம். ஜோதிபாசு
- துணை வேந்தர்
- ஜி. ரவி…
- தின மலர்
காரைக்குடி, பிப்.20:காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிப்பகத் துறையின் சார்பில் காஞ்சிவனக் கருப்பன் தென்னாடு வந்த கதை என்ற ஒலைச்சுவடி, நூல் மற்றும் மின்னூல் வடிவில் வெளியிடும் விழா நடந்தது. பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் மு.ஜோதிபாசு வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி நூலினை வெளியிட்டு பேசுகையில், ஒவ்வொரு மனிதரும் தன் குடும்ப வரலாறு, பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொடு இடத்திற்கு புலம்பெயரும் போது நாம் சந்திக்கும் இன்னல்களை நம்முடைய குலதெய்வம் நம்முடனேயே இருந்து நம்மை காக்கும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது என நூலின் வாயிலான தெரிவித்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர், அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராசாராம், இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் சங்கரநாராயணன், தமிழ் பண்பாட்டு மைய இயக்குநர் பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை, தொலைநிலை, இணையவழிக் கல்விமைய இயக்குநர் பேராசிரியர் கண்ணபிரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
The post அழகப்பா பல்கலையில் நூல் வெளியீடு appeared first on Dinakaran.