- அகில இந்திய பல்கலைக்கழகம்
- போட்டி
- K.R கல்லூரி
- கோவில்பட்டி
- நெல்லை மனோன்மணியம்
- சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி
- தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டி
- சென்னை
- அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டி...
- தின மலர்
கோவில்பட்டி, பிப். 20: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணி, கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஹாக்கி போட்டியில் 3ம் இடம் பெற்று, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்றது. அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள், வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் குருகுல காங்கிரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கே.ஆர்.கல்லூரி மாணவர்கள் ராமநாதன், நந்தகுமார், இசக்கிமுத்து, மனோஜ்குமார். வேல்ராகவன், அரவிந்த் மற்றும் திவாகர் ஆகிய 7 மாணவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஹாக்கி அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர், துணை தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குநர். பயிற்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பாராட்டினர்.
The post அகில இந்திய பல்கலை. ஹாக்கி போட்டி கே.ஆர்.கல்லூரி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

