- விளையாட்டு திருவிழா
- பாரதிதாசன் கல்லூரி
- ஈரோடு
- 30வது விளையாட்டு விழா
- பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல்
- கல்லூரி
- எல்லிஸ்பேட்டை, ஈரோடு
- முதல்வர்
- என்.கே.கே.
- பெரியசாமி
- கல்லூரி செயலாளர்.
- NKKP நரேன்ராஜா
- பாரதிதாசன்
- தின மலர்
ஈரோடு, பிப். 20: ஈரோடு அடுத்த எல்லீஸ்பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் என்.கே.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் என்கேகே.பி.நரேன்ராஜா தேசிய கொடி மற்றும் கல்லூரியின் கொடியினை ஏற்றி வைத்தார். கல்லூரியின் பொரளாளர் வி.ஆர்.முருகன், இணை செயலாளர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, துணை முதல்வர் ப.சுரேஷ் பாபு, நிர்வாக அலுவலர் அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சிவசந்திரன் கலந்து கொண்டார். விழாவில்ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட போட்டி, தொடர் ஓட்டம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, குண்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல், சதுரங்கம், கேரம், கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகள் மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என அணி வாரியாக நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியின் செயலாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் பரிசும், சான்றிதழ்களும் வழங்கினர்.
The post பாரதிதாசன் கல்லூரியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.