உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ரூ.35 லட்சத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ சுந்தர் பங்கேற்று தொடங்கி வைத்தார். உத்திரமேரூர் அடுத்த எடமச்சி, பொற்பந்தல் மற்றும் கிடங்கரை கிராம விவசாயிகளுக்காக சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகி வெங்கடேசன், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன். ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை விழாவினை துவக்கி வைத்தார். நெல் பாதுகாப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
The post உத்திரமேரூர் அருகே ரூ.35 லட்சம் மதிப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் கிடங்கு அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ சுந்தர் பங்கேற்பு appeared first on Dinakaran.