திருப்பூர்: திருப்பூரில் வடமாநில பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 24 வயது பெண் தனது கணவர், குழந்தையுடன் கோவை தெக்கலூரில் பணியில் சேர வந்துள்ளார். வேலை பிடிக்காததால் மீண்டும் ஒடிசா செல்ல கோவையில் இருந்து திருப்பூர் வந்துள்ளனர்
திருப்பூர் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த தம்பதியிடம் 3 பேர் அறிமுகமாகி வேலை இருப்பதாக அழைத்துச் சென்றனர். இரவில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்த 3 பேரும் கத்திமுனையில் கணவரை மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தனர். பீகாரை சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷிக் ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post திருப்பூரில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது appeared first on Dinakaran.