- பூம்புகார்
- தரங்கம்பாடி
- எம்.எல்.ஏ நிவேதமுருகன்
- மயிலாதுதுரை மாவட்டம்
- அமைச்சர்
- மெய்யநாதன்
- சட்டமன்ற உறுப்பினர்
- நிவேதா முருகன்
- தின மலர்
தரங்கம்பாடி,பிப்.19: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியில் எம்எல்ஏ நிவேதாமுருகன் ஏற்பாட்டில் மக்களிடம் குறைகளை கேட்க தனி வாகனம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அதை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறைதீர் முகாம்களை ஊராட்சிகள் தோறும் நடத்தி வருகிறார். அத்துடன் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற ஒரு வாகனத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். அந்த வாகனம் கிராம், கிராமமாக சென்று மக்களின் மனுக்களை பெற்று எம்எல்ஏவிடம் சேர்ப்பிக்கும்.
எம்எல்ஏ முயற்சியால் மக்களின் குறைகள் நிவத்தி செய்யபடும். தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மக்களிடம் மனுக்களை பெற்று அந்த வாகனத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதாமுருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜ்குமார், மயிலாடுதுறை எம்பி சுதா, திமுக ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அமுர்தவிஜயகுமார், அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் முகமதுசித்திக், அருட்செல்வன், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மனுக்ளை அளித்தனர்.
The post பூம்புகார் தொகுதியில் மக்களிடம் குறைகளை கேட்க தனி வாகனம் appeared first on Dinakaran.
