- ராஜபாளையம்
- ராஜபாலியம்
- ராஜபாளியம் புதிய பேருந்து நிலையம்
- கார்த்திகேயன்
- ராஜபாளையம் சங்கரங்கோ
- கூனன்குளம்
ராஜபாளையம், பிப்.19: ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்த இரு சிறுவர்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ராஜபாளையம் அருகே கூனங்குளம் கிராமத்தில் இரவு பணியாற்றி விட்டு நள்ளிரவு ஒரு மணி அளவில் புதிய பேருந்து நிலையம் வந்து பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
புதிய பேருந்து நிலையம் அருகே சிங்கதிருளப்பசாமி கோவில் பின்புறம் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மூன்று பேர் வழிமறித்து இவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை பறித்து பார்த்து பணம் இல்லாததால் தூக்கி எறிந்து விட்டனர். இது குறித்து கார்த்திகேயன் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி மற்றும் அடையாளங்களை வைத்து பார்த்த போது வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளி பாஞ்சாலி ராஜன்(24) மற்றும் இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, பாஞ்சாலி ராஜன் சிறையிலும், இரு சிறார்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
The post ராஜபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.
