×

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

 

திண்டுக்கல், பிப். 19: திண்டுக்கல் கிழக்கு தாலுகா ராசக்காபட்டி, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் கிழக்கு தாலுகா ராசாக்கப்பட்டி, குமாரபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளியாக உள்ளோம். எங்களுக்கு வீடு வசதி இல்லாததால் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். எனவே கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தந்து உதவும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

The post இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kumarapalayam ,Rajakkapatti ,Dindigul East ,taluka ,Dindigul Collector ,Collector ,Saravanan ,Dindigul East… ,Dinakaran ,
× RELATED வேடச்சந்தூர் அருகே கார் மீது லாரி...