×

முத்தையாபுரம் காவல் நிலையத்தை அரசு பள்ளி மாணவர்கள் பார்வை

ஸ்பிக்நகர், பிப். 19: பாரதிநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் காவல் படை அமைப்பின் சார்பில் 25 மாணவ- மாணவியர், முத்தையாபுரம் காவல் நிலையத்தை பார்வையிட்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செயல்முறைப்படி பாரதிநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை அமைப்பில் உள்ள 25 மாணவ- மாணவியர், முத்தையாபுரம் காவல் நிலையத்தை பார்வையிட்டனர். தலைமை காவலர் சொர்ணலிங்கம், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். எஸ்ஐ வீரபாகு மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சபரிநாதன் செய்திருந்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா நன்றி தெரிவித்தார்.

The post முத்தையாபுரம் காவல் நிலையத்தை அரசு பள்ளி மாணவர்கள் பார்வை appeared first on Dinakaran.

Tags : Muthaiyapuram ,police station ,Spiknagar ,Bharathinagar Corporation Middle School Police Force ,Muthaiyapuram police station ,District Superintendent of Police ,
× RELATED கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காலியாக...