×

மணலி புதுநகர் மயான பூமியில் ரூ.1.60 கோடியில் தகன மேடை: துணை முதல்வர் திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: மணலி புதுநகர் பிரதான சாலையில் உள்ள மயான பூமியை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.60 கோடி செலவில் நவீன எரியூட்டு தகன மேடை அமைக்கப்பட்டது. இதை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் வைத்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர்கள் நந்தினி, காசிநாதன், ராஜேந்திரன், தீர்த்தி, செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர் தென்னவன், உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் ஆகியோர் நவீன எரியூட்டு தகனம் மேடை, கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டனர். இந்த நவீன எரியூட்டு தகன மேடையை 15, 16வது வார்டுகளை சேர்ந்த மணலி புதுநகர், பகுதி 1, 2, ஆண்டார்குப்பம், இடையஞ்சாவடி, நாப்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு ரூ.60 லட்சம் செலவில் நவீன பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பணியும் விரைவில் துவங்கும்’’ மண்டல குழு தலைவர் என ஏ.வி.ஆறுமுகம் தெரிவித்தார்.

The post மணலி புதுநகர் மயான பூமியில் ரூ.1.60 கோடியில் தகன மேடை: துணை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Manali New Town ,Chennai Corporation ,Udhayanidhi… ,Manali New Town cemetery ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு