×

பிடிவாரன்ட் எதிரொலி கோர்ட்டில் சீமான் ஆஜர்

விக்கிரவாண்டி: பிடிவாரன்ட் எதிரொலியாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 2019ல் நடைபெற்றபோது கஞ்சனூர் அருகே நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் ெசய்த மனுவும் தள்ளுபடியானது. இந்நிலையில், விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சீமான் நேற்று நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி வைத்தார்.

 

The post பிடிவாரன்ட் எதிரொலி கோர்ட்டில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : SEEMAN AZAR ,BIDEAVARANT ECHO COURT ,Vikrawandi ,Seaman ,Wickrawandi Court ,Bidvarant ,Nataka ,Nemur ,Kanchanur ,Vikriwandi ,elections ,Viluppuram district ,Rajiv Gandhi ,Seaman Azhar ,Pidavarant Echo Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...