×

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:சென்னை பழவந்தாங்கலில் பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு நடைபெற்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதான பெண் காவலர் நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு 10.30 மணி அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலைய நடைபாதையில் நடந்து சென்ற போது அவரை பாலியல் தொந்தரவு செய்து, செயினை பறித்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிக்கிறார். பாலியல் தொந்தரவு செய்த நபர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த குற்றச்செயலுக்கு காரணம் போதைப்பொருள் என்பதும், போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. மேலும் பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளை கைது செய்வதோடு, கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, போதைப்பொருளை அழித்து, போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

The post பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G.K. Vasan ,Chennai ,TAMAK ,president ,Palavantangal ,Chennai Police Commissioner ,Dinakaran ,
× RELATED சூறைக்காற்று மற்றும் புயல்...