- இந்தியா
- கத்தார்
- பிரதமர் மோடி
- அதிபர் அல்-தானி
- புது தில்லி
- மோடி
- ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி
- ஜனாதிபதி
- ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி
- வேந்தர்
- அல்-தானி
- தின மலர்
புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா-கத்தார் இடையேயான வர்த்தகத்தை ரூ.2.40 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க பிரதமர் மோடி, கத்தார் அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி இலக்கு நிர்ணயித்துள்ளனர். கத்தார் அதிபர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று அவரை வரவேற்றார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் கத்தார் அதிபருக்கு நேற்று முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவன் வந்த அதிபர் அல்தானியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரவேற்று மரியாதை அளித்தார்.
இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடி, கத்தார் அதிபர் அல் தானி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. இதில் வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் பரஸ்பர மக்கள் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகள் இடையே பரஸ்பர வர்த்தக கூட்டாண்மையை நிறுவுதல் மற்றும் இரட்டை வரிவிதிப்பை நீக்குவது என 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இளைஞர் நலன், விளையாட்டு உள்ளிட்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. மேலும், இந்தியாவும் கத்தாரும் அடுத்த 5 ஆண்டுகளில் இரு தரப்பு வர்த்தகத்தை ரூ.2.40 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க இரு நாட்டு தலைவர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
The post அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-கத்தார் வர்த்தகம் இரட்டிப்பாக்குவதே இலக்கு: பிரதமர் மோடி-அதிபர் அல்-தானி முடிவு appeared first on Dinakaran.
