திருவொற்றியூர்: மணலி பழைய எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சஞ்சய் (23). கார் டிரைவர். இவரும், திருவொற்றியூரை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த இருவீட்டு பெற்றோர், இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர், இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், சஞ்சயின் சகோதரர் ஜெகனுக்கு, கடந்த 16ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது. இதில், சஞ்சயின் காதலி ஐஸ்வர்யா மற்றும் அவரது பெற்றோரும் கலந்து ெகாண்டனர். அப்போது, தனது பெற்றோரை சரிவர கவனிக்கவில்லை என ஐஸ்வர்யா கோபமடைந்து, காதலன் சஞ்சயிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா, அதன் பின்னர் சஞ்சயிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். பலமுறை முயற்சி செய்தும் அவர் போனை எடுக்காததால், மன உளைச்சலில் இருந்த சஞ்சய், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மணலி போலீசார், சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமண நிச்சயம் நடந்த நிலையில் காதலி பேசாததால் மனம் உடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post வருங்கால மனைவி பேசாததால் திருமணம் நிச்சயித்த வாலிபர் தற்கொலை: மணலியில் சோகம் appeared first on Dinakaran.
