×

விஜய் நடிக்கும் 68வது படம் வெங்கட் பிரபு இயக்குகிறார்

சென்னை: விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், விஜய் நடிக்கும் 68வது படத்தைப் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இதை வெங்கட் பிரபு எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இத்தகவலை விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் டிவிட்டரில் உறுதி செய்துள்ளனர். ‘பிகில்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்துடன் விஜய் இணையும் படம் இது. ஏஜிஎஸ் தயாரிக்கும் 25வது படமான இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சர்வதேச தரத்தில் சிறந்த ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாகும் இதில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பணியாற்றுகின்றனர். அதுபற்றிய விவரங்களும், படத்தலைப்பும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post விஜய் நடிக்கும் 68வது படம் வெங்கட் பிரபு இயக்குகிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Venkat Prabhu ,Chennai ,Lokesh Kanagaraj ,Trisha ,Sanjay Dutt ,Arjun ,Myshkin ,Gautham Vasudev Menon ,Priya Anand ,Manoj Paramahamsa… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’...