×

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நீர் நிலைகள் அமைப்பதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர் நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது. வழக்கு தொடர ஜிம்கானா கிளப்க்கு எந்த உரிமையும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குத்தகைக்கு விட்ட நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முன்பு ஜிம்கானா கிளப்க்கு எந்த நோட்டீசும் அளிக்க வேண்டிய அவசியமில்லை என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.

The post சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நீர் நிலைகள் அமைப்பதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai Guindy Race Course ,Chennai ,Chennai Guindy Race Club ,Gymkhana Club ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...