×

அவசர அவசரமாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? – காங்கிரஸ் கேள்வி

டெல்லி: அவசர அவசரமாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நாட்டின் 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார்.புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அந்த வகையில் அவசர அவசரமாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தேர்தல் ஆணையர் நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அவசர, அவசரமாக நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமதித்தது தவறு. புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசால் ஒரு நாள் கூட காத்திருக்க முடியாதா? ஏன் இந்த அவசரம்?.

தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி அவசர அவசரமாக சட்டம் இயற்றி, தற்போது தேர்தல் ஆணையரை நியமித்துள்ளனர். ஒன்றிய பா.ஜ.க., அரசு, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றி, தங்களுக்கு சாதகமாக தேர்தல் நடைமுறைகளை மாற்றி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. போலி வாக்காளர் பட்டியல், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என பா.ஜ.க., மீதான சந்தேகம் தற்போது மேலும் வலுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அவசர அவசரமாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? – காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Delhi ,Congress ,Nyanesh Kumar ,Nanyesh Kumar ,Modi ,Dinakaran ,
× RELATED தலையில்லாத உடலுடன் மோடியை குறியீடு...