×

இந்தியா வந்த கத்தார் மன்னரை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி!

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கத்தார் மன்னரை பிரதமர் மோடி வரவேற்றார். கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, ஒன்றிய அமைச்சர்கள் அல்லது வெளியுறவு அதிகாரிகள், நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் தற்போது, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தனது இரண்டு நாள் பயணத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கத்தார் மன்னார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா வந்த கத்தார் மன்னரை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,King of ,Qatar ,India ,Delhi ,Delhi Airport ,President ,Sheikh Tamim bin Hamad Al Thani ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…