திருச்சி, பிப்.18: திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 18 கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு, சொத்துவரி பெயர் மாற்றம், சொத்துவரி குறைப்பு, பாதாளசாக்கடை இணைப்பு, சாலையோரகடைகள் ஆக்கிரமிப்புகள், வேலை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கவும், பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள்மீது உரிய தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு மேயர் அன்பழகன் தெரிவித்தார்.முகாமில் மண்டலத் தலைவர் துர்காதேவி, உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.