- நீடாமங்கலம்
- செயிண்ட் மேரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி
- மெளலவந்தசேரி
- நீடமங்கலம் யூனியன்
- திருவாரூர்
- தாவரங்கள்
- ஆரோக்கிய மேரி…
- தின மலர்
நீடாமங்கலம், பிப். 18: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தசேரியில் உள்ள புனித மரியன்னை அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி 107வது பள்ளி ஆண்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் புளோரா தலைமை வகித்தார். முன்னதாக ஆரோக்கியமேரி வரவேறார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா, ஆசிரிய பயிற்றுநர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை நிர்மலாராணி ஆண்டறிக்கை வாசித்தார். செபஸ்தியான், ஆரோக்கியமேரி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் ஜுலியஸ், ராஜ்குமார் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினர். இர்குக் மாணவகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மேரி பீட்டர் நன்றி கூறினார்.
The post நீடாமங்கலம் அருகே பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.