- சியாமலாதேவி அம்மன் கோயில்
- கும்பாபிஷேகம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் நாணயச் செட்டி தெரு
- தஞ்சாவூர் சிவகங்கா பூங்கா
- தன்னையக்கர செட்டி வீதி சியாமலா தேவி அம்மன் கோயில்
- சியாமலாதேவி
- அம்மன்
- கோவில்
தஞ்சாவூர், பிப்.18: தஞ்சாவூர் நாணயக்கார செட்டி தெரு சியாமளாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் உள்ள நாணயக்கார செட்டி தெரு சியாமளா தேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க கடம் புறப்பாடு நடந்தது. பின்னர், காலை 9 மணிக்கு சியாமளா தேவி அம்மன் ஆலய விமானம் மற்றும் பரிகாரம் ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
The post சியாமளாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.