- கூட்டு
- இயக்குனர்
- தஞ்சாவூர் கல்லூரி கல்வி
- தஞ்சாவூர்
- பிராந்திய இணை இயக்குநர்
- கல்லூரி கல்வி
- டாக்டர்
- ரோஸி
- தின மலர்
தஞ்சாவூர், பிப்.18: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து கல்லூரிக்கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர்.ரோசியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்: தமிழகத்திலுள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் 7374 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றோம். குறைந்த ஊதியம், பணிப்பாதுகாப்பின்மை உள்ளிட்ட சூழலிலும் கல்லூரி மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வித்துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பினைச் செய்து வருகின்றனர்.
எங்களது நீண்ட கால கோரிக்கைகளான பணிநிரந்தரம், UGC-யின் அடிப்படை ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு வழங்கக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். உயர் நீதிமன்றம் எங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்கச் சொல்லித் தீர்ப்பளித்துள்ளது. எங்களின் நீண்டகால கோரிக்கையினை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உயர்கல்வித்துறை, மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ வெளிவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post தஞ்சை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலக முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.