×

ஜெயங்கொண்டத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை தாக்கி போதை ஆசாமிகள் தப்பி ஓட்டம்

 

ஜெயங்கொண்டம் பிப்.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் போலீசார் முருகன் உள்ளிட்ட போலீசார் விருதாச்சலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெயங்கொண்டம் அடுத்து கீழே குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் போதையில் ஜெயங்கொண்டம் வந்து கொண்டிருந்தபோது மகிமைபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சோதனை செய்த போது மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களை விசாரணை செய்தபோது காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் போலீசார் முருகன் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கடுமையாக தாக்கியும் போலீசார் கையை கடித்தும் தப்பி ஓடினர். காயம் ஏற்பட்ட காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரத் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post ஜெயங்கொண்டத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை தாக்கி போதை ஆசாமிகள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Jayankondam ,Ariyalur district ,Loganathan ,Murugan ,Vridhachalam… ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை கூடத்தில் நாளை முதல் டோக்கன் முறை அறிமுகம்