ராமநாதபுரம், பிப்.18: தீவிபத்தில் வீடு சேதமாகி விட்டதால், அரசு வீடு திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளி பெண் கலெக்டரிடம் மனு அளித்தார். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மண்டபம் அருகே நயினார் மரைக்காயர் பட்டிணம் கொல்லந்தோப்பு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நிலர்வேணி மனு அளித்தார்.
இது குறித்து நிலர்வேணி கூறும்போது, நான் குடும்பத்துடன் வசிந்து வந்த குடிசை வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிறையாகி முழுமையாகி சேதமடைந்து விட்டது. பொருட்களும், உடைமைகளும் சேதமாகி விட்டது. எனவே கலைஞர் கனவு இல்லம் திட்டம் அல்லது அரசுகளின் வீடு வழங்கும் திட்டங்களின் கீழ் வீடு கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post வீடு கட்டித்தர மாற்றுத்திறனாளி மனு appeared first on Dinakaran.