- ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
- சென்னை
- சுகாதார அமைச்சர்
- பொது நலன்புரி
- எம் சுப்பிரமணியன்
- அலகு
- பெண்கள் மற்றும்
- மருத்துவ சிகிச்சை பிரிவு
- தின மலர்
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, தீவிர இதய நோய் சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய்க்கான பிரத்யேக கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் குகைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷா, நிலைய மருத்துவ அலுவலர் சாய்வித்யா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
The post ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.
