ஸ்ரீபெரும்புதூர்: மலைப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை வெட்டிய வழக்கில் 9 பேர் போலீசாரால் கைது செய்துள்ளனர். தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகன் ராஜேஷ் (40). சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி ராஜேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற மர்ம கும்பல் ராஜேஷை தாக்கி, கத்தியால் அவரது கையில் வெட்டி 8 சவரன் செயினை பறித்து சென்றனர். ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.இதில், பதிவான காட்சிகளை கொண்டு, சென்னை, வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் டிராவல்ஸ் மேலாளராக பணியாற்றும் கோட்டீஸ்வரன் (40). இவரது டிரைவர் சேதுபதி (28) ஆகியோரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், கோட்டீஸ்வரனுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால், பெரிய அளவில் கொள்ளையடித்து வாழ்வில் செட்டிலாக வேண்டும் என நண்பர்களுடன் விவாதித்துள்ளனர்.
அப்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர்களது நண்பர் பாஸ்கர் (40) என்பவர் மலைப்பட்டை சேர்ந்த ராஜேஷ் வீடு பெரிய வீடாக உள்ளது. அவர் சொந்தமாக தொழில் செய்து வருவதால் அவரது வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் அதை கொள்ளை அடிக்கலாம் என கூறியுள்ளார்.இதையடுத்து திருநெல்வெலியை சேர்ந்த சவுந்தரபாண்டி (26) என்பவர் மூலம் ஆட்களை ஏற்பாடு செய்து ராஜேஷ் வீட்டில் புகுந்து கொள்ளையடித்தபோது, அங்கு இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணம், நகை இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து ராஷேஷை வெட்டி அவரிடம் இருந்த 8 சவரன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டீஸ்வரன்(40), சுந்தரபாண்டி (26), பாஸ்கர் (40), சேதுபதி (28), பிச்சைகண்ணு (24), நம்பி (20), நல்லக்கண்ணு (25), சரவணன் (28) பெருமாள் (47) ஆகிய ஒன்பது பேரை சோமங்கலம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
The post முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை வெட்டிய 9 பேர் கைது appeared first on Dinakaran.