×

மும்மொழி கொள்கை பற்றி புரிதல் இல்லாதவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற வாய்ப்பே இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: மும்மொழி கல்விக்கொள்கை குறித்து புரிதலே இல்லாதவர்கள் தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள வட மணி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும், நிருபர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், நல்லவேளை நான் கூட பயந்தேன் தமிழ்நாட்டின் அரசியல் களம் தெரிந்து தான் பாரதிய ஜனதா தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கிறது என நினைத்தேன் ஆனால், பாஜவிற்கு தமிழகத்தின் சென்டிமென்ட்டும் தெரியவில்லை, மும்மொழிக்கொள்கைக்கான ப்ளஸ், மைனஸ் தெரியவில்லை. அதற்கு ரொம்ப சந்தோஷம், புரிதலே இல்லாதவர்களுக்கு தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை, தமிழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் என்னென்ன செய்தோம் என நாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என பேசினார்.

The post மும்மொழி கொள்கை பற்றி புரிதல் இல்லாதவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற வாய்ப்பே இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,School Education Minister ,Anbil Mahesh ,Chennai ,
× RELATED கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்