×

கும்மிடிப்பூண்டியில் தேசிய அளவிலான யோகா போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தேசிய அளவிலான யோகாசன போட்டியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.கும்மிடிப்பூண்டியில் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் யோகா பயிற்சியாளர் காளத்தீஸ்வரன் தலைமையில் தேசிய அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த தேசிய யோகாசன போட்டியை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் திமுக மாவட்ட பொருளாளர் ரமேஷ், நகரச் செயலாளர் அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர் குமார், அரிமா சங்க நிர்வாகி முத்து, தினேஷ், நோவா உலக சாதனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து வயது வாரியாக நடைபெற்ற யோகா போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை எம்.ஹரிஷ் மற்றும் சீத்தேஷ் ஆகியோர் பெற்றனர். இரண்டாம் இடத்தை யோஜித், நீலேஷ் ஆகியோர் பிடித்தனர். பெண்கள் பிரிவில் ஜெய ஸ்ரீதனா, மதுலிகா ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இரண்டாம் இடத்தை பூஜ்ஜியா , மற்றும் ரெஜினா பிடித்தனர். இந்த தேசிய யோகா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கும்மிடிப்பூண்டியை தனியார் பள்ளி தட்டிச் சென்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் முனுசாமி சேதுபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். இந்த போட்டியை தனியார் யோகா பயிற்சி மைய நிறுவனர் காளத்தீஸ்வரன் மற்றும் யோகா பயிற்சி மைய ஆசிரியர்கள் அர்ச்சனா, வித்யா ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.

 

The post கும்மிடிப்பூண்டியில் தேசிய அளவிலான யோகா போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : National level ,competition ,Gummidipoondi ,MLA ,T.J. Govindarajan ,Kalatheeswaran ,Tamil Nadu ,Andhra Pradesh ,Pondicherry… ,level ,Gummidipoondi: ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...