×

பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து முடிவெடுக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது: திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா

சென்னை: பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து முடிவெடுக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது என திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா தெரிவித்துள்ளார். குழு அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்பதுதான் தலைமைச் செயலாளர் கடிதத்தில் இருக்கும் செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “கடிதத்தில் இருக்கும் தகவலை மறைத்துவிட்டு பாஜக பரப்பும் அதே பொய்யை அதிமுகவும் பரப்புகிறது . இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த தத்துவார்த்த நிலைப்பாடும் அதிமுகவால் முன்னெடுக்கப்பட்டது அல்ல. அத்தனையுமே திமுகவால் முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டவை. அதிமுகவுக்கு என்று கொள்கை நிலைப்பாடுகளோ, போராட்ட வரலாறோ இல்லை” என திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா தெரிவித்துள்ளார்.

The post பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து முடிவெடுக்க மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது: திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா appeared first on Dinakaran.

Tags : DMK ,MM Abdullah ,Chennai ,MP MM Abdullah ,Chief Secretary ,Dinakaran ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்