×

எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடந்ததா?கிரித்தி ஷெட்டி ஆவேசம்

ஐதராபாத்: தெலுங்கில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் அவர் நடித்த ‘தி வாரியர்’, ‘கஸ்டடி’ ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. இந்நிலையில், கிரித்தி ஷெட்டி தன்னுடைய முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக தவகல்கள் வெளியானது. இதுகுறித்து கிரித்தி ஷெட்டி ஆவேசத்துடன் அளித்த விளக்கம் வருமாறு: இதுபோன்ற சில கடுமையான விமர்சனங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள உள்நோக்கம் குறித்து எனக்கு எதுவும் புரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் ஏன் எதிர்மறை கருத்துகளை மட்டுமே பரப்புகிறார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.

நான் என்ன தவறு செய்தேன்? அவர்கள் என்மீது வெளிப்படுத்தும் இதுபோன்ற கோபத்துக்கு என்ன காரணம்? நடிகர், நடிகைகளைப் பற்றியும், அவர்களது குடும்பத்தினர் பற்றியும் வேண்டுமென்றே சிலர் வதந்திகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர். அப்படிச் செய்வதால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்று தெரியவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன், அதை வைத்து என் முகம் ’உப்பெனா’ படத்தில் இருந்தது போன்று இல்லை என்று சொல்கின்றனர். பொதுவாக சிகை அலங்காரம், மேக்கப் போன்றவற்றால் முகத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. மேலும், வயது கூடும்போது உடலில் மாற்றங்கள் ஏற்படும். இதை ஏன் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை?

The post எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடந்ததா?கிரித்தி ஷெட்டி ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kriti Shetty ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED புஷ்பா சுகுமார் இயக்கத்தில் ராம் சரண்