×

மதுரை தமுக்கம் தபால் நிலையம் அருகே யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

மதுரை: யுஜிசி விதிகளில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மதுரை தமுக்கம் தபால் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுஜிசி விதிகளில் கொண்டுவந்துள்ள திருத்தம் காரணமாக கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகள் பரிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநில உரிமைகளும் பறிக்கப்படுவதால், மாநில சுய ஆட்சியில் தலையிடுகின்ற செயலாக இருக்கிறது. எனவே யுஜிசி கொண்டுவந்துள்ள வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கையை புதிய கல்வி கொள்கை வழியாக கொண்டுவருகின்ற முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நிதியை தர முடியாது என கூறிவரும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை தமுக்கம் தபால் நிலையம் அருகே யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Madurai Tamukkam Post Office ,UGC ,Madurai ,Dinakaran ,
× RELATED பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ...