×

2024 ஏப்.-2025 ஜன. வரை 10 மாதங்களில் ரூ.1.55 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்தது இந்தியா..!!

டெல்லி: 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை 10 மாதங்களில் ரூ.1.55 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், 2024 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் கிட்டத்தட்ட 10 சதவீத சந்தைப் பங்கைப் பெற்று, முதல் முறையாக இந்தியாவின் முதல் 5 ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக நுழைந்துள்ளது என்று தொழில்துறை தரவுகள் தெரிவித்துள்ளன.

மொத்த ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதியில் ஐபோன்கள் மட்டுமே 70% ஆகும், சாம்சங் ஸ்மார்ட் போன்கள் பங்கு 20% ஆகும். ஏற்றுமதி செய்யும் ஐபோன்களில் 50% தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும், 12% பெகட்ரான் நிறுவனமும். கர்நாடகத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வசமுள்ள விஸ்ட்ரான் ஆலையில் 22% ஐபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல்-ஜனவரி வரையிலான 10 மாதத்தில் ரூ.99,120 கோடியாக இருந்த ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 2024 ல் 55% அதிகரித்துள்ளது.

 

The post 2024 ஏப்.-2025 ஜன. வரை 10 மாதங்களில் ரூ.1.55 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்தது இந்தியா..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Apple ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...