சென்னை: பை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தின உரையின்போது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வரசாணையில் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும் எனவும், 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் / ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்களும் / முன்னாள் படைவீரர்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் விதவை மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறலாம்.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முன்னாள் ராணுவ வீரர்களின் விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுகின்றன. https://www.exwel.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் பயன் பெற முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.