- தர்மபுரி
- Papparapatti
- தர்மபுரி மாவட்டம்
- உணவு பாதுகாப்பு அதிகாரி
- டாக்டர்
- பானு சுஜாதா
- கந்தசாமி
- தின மலர்
தர்மபுரி, பிப்.17: பாப்பாரப்பட்டியில், புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில், உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, நேற்று பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினார். இதில், அதிகாரிகளுடன் போலீசாரும் இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாப்பாரப்பட்டி டவுனில் ஒரு டீக்கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 16 பான் மசாலா பாக்கெட்டுகளையும், ஒரு பெட்டிக்கடையில் இருந்து 20 பான்மசாலா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட இரு கடைகளையும் பூட்டி சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு தலா ₹50 ஆயிரம் அபராதம் வீதம் ₹1 லட்சம் அபராதம் விதித்தனர்.
The post புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.
