- சுள்ளங்குடி
- வரதராஜா
- பெருமாள் கோயில்
- Kumbabhishekam
- அரியலூர்
- வரதராஜ பெருமாள் கோயில்
- Thirumanur
- அரியலூர் மாவட்டம்
- விஷ்வக்சேனன்
- சுல்லங்குடி வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர், பிப். 17: அரியலூர் மவட்டம், திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், பகவத் அனுக்ஜை உள்ளிட்ட முதல் கால சிறப்பு ஹோமம், நேற்று காலை 6 மணியளவில் பகவத் அனுக்ஞை, திருபள்ளிஎழுச்சி, புண்யஹாவாசனம், மகாசங்கல்பம் உள்ளிட்ட 2-ம் கால ஹோமமும் நடைபெற்றது.தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, தேவி, பூமாதேவி உடனுறை வரதராஜபெருமாள் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கலசம் மற்றும் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post சுள்ளங்குடி வரதராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.