×

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

 

ஈரோடு, பிப்.17: ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம் பாளையத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன். இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் லட்சுமி நகரில் உள்ள செல்போன் கடை முன்பு 65 முதல் 70 வயது மதிக்கதக்க ஒரு ஆண் நபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு சென்ற ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக லட்சுமி நகர் பகுதியில் சுற்றித்திரிந்து, ஓட்டல்களில் கிடைப்பதை வாங்கி சாப்பிட்டு, கடைகள் முன்பு படுத்து தூங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : MALE CORPSE ,Erode ,Jeganathan ,Metunaswam ,Erode district ,Lakshmi city ,Male Corpse Recovery ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது