சிவகங்கை, பிப்.17: ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு இன்று(பிப்.17) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊராட்சி ஒன்றியங்களில் காலியாகவுள்ள கணினி இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடம் தற்காலிக அடிப்படையிலானது. மாதம் ரூ.14000 தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த நபர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் அனுபவம் பெற்றவராகவும், கீழ்நிலை தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவைகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 1.3.2025 அன்று குறைந்தபட்சம் 18வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொது வகுப்பினர் 30வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் 32வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகேயுள்ள தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மாதிரி விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அதே ஊராட்சி ஒன்றியங்களில் விண்ணப்பங்களை இன்று முதல் பிப்.24வரை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஊராட்சியில் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.