வேளச்சேரி: துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் சிக்னலில் நின்றிருந்த கார் திடீர் என தீபற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலாங்கரையை சேர்ந்தவர் பிரபு (34). இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் நேற்று இரவு 7மணி அளவில் தோமையார்மலை சர்ச்சுக்கு சென்று கொண்டிருந்தார். பிராங்க்ளின் (28) என்பவர் காரை ஓட்டி சென்றார். துரைபாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக சென்றபோது, பள்ளிகரணை மேம்பாலம் சிக்னல் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் புகை வந்து தீப்பற்றி எரிந்தது. உடனே, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர். அப்போது அங்கிருந்த பள்ளிகரணை போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பள்ளிக்கரணை காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு பள்ளிகரணையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பள்ளிக்கரணை சிக்னலில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் appeared first on Dinakaran.
