- மாவட்ட மைய நூலகம்
- திருச்சி
- TNPSC
- திருச்சி மாவட்ட மைய நூலகம்
- என்.ஆர். ஐ.ஏ.எஸ் அகாடமி
- ரோட்டரி பீனிக்ஸ்…
- மாவட்டம்
- மத்திய நூலகம்
- தின மலர்
திருச்சி, பிப்.16: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- IV போட்டித் தேர்விற்கான மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகம், என்ஆர். ஐஏஎஸ் அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- IV பதவிகளுக்கான போட்டித் தேர்வையொட்டி மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (17ம் தேதி) காலை 10 மணி முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், அலகு -5 ல் வாசித்தல், புரிந்து கொள்ளுதல், திறன், நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் நேரம் மற்றும் வேலை ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம் பெறும்.
The post மாவட்ட மைய நூலகத்தில் நாளை குரூப் -IV தேர்வுக்கான மாதிரி தேர்வு appeared first on Dinakaran.