×

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு

நாமக்கல், பிப்.16: நாமக்கல்லில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் பிரபுசங்கர் வரவேற்று பேசினார். இதில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில், ஒன்றியத்தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்கவேண்டும். எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து வையப்பமலை ஊராட்சி ஒன்றியத்தை புதியதாக உருவாக்கவேண்டும். அதிக குக்கிராமங்களை கொண்ட ஊராட்சிகளை பிரித்து, புதிய ஊராட்சிகளை உருவாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் திருவரங்கன், மாநில செயலாளர் வீரகடம்ப கோபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு appeared first on Dinakaran.

Tags : Rural Development Officers Association Conference ,Namakkal ,Tamil Nadu Rural Development ,Association ,Rajendra Prasad ,District Joint Secretary ,Prabhu Shankar ,Namakkal District Rural Development Department ,Dinakaran ,
× RELATED தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும்