×

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் ஆட்ேடாக்களுக்கு புதிய கட்டுப்பாடு

கூடுவாஞ்சேரி, பிப்.16: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், கடந்த 3ம் தேதி அன்று, 19 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் ஆட்டோக்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்து, இங்கு வந்து செல்லும் ஆட்டோக்களை முறைப்படுத்த உள்ளனர்.

அதன்படி, ஆட்டோ ஓட்டுநர்களின் விவரம், அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா, ஆட்டோ உரிமையாளர்கள் கடிதம், ஆட்டோக்களின் ஆவணங்கள் சரிபார்பு என ஒழுங்குப்படுத்த புதிய திட்டம் உருவாக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேருந்து முனையம் செயல்பட தொடங்கிய பின், 16 தொழிற்சங்கங்கள் வாயிலாக, இதுவரை 1500 ஆட்டோக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே பேருந்து முனையத்திற்குள் வந்து செல்ல அனுமதி உண்டு. இந்நிலையில், சமீப காலமாக அனுமதி பெறாத ஆட்டோக்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே இருக்கும் நடைமுறை தான் தற்போது பின்பற்றப்படுகிறது. அனைத்து துறை அதிகாரிகளுடன் உரிய ஆலோசனை செய்து ஆட்டோக்கள் வந்து செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்’ என்றனர்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் ஆட்ேடாக்களுக்கு புதிய கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Glampakkam bus terminal ,Kuduvanchery ,Dinakaran ,
× RELATED கீரப்பாக்கம் அரசு பள்ளியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு முகாம்