- வின்சென்ட்
- ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம்
- குகேஷ்
- ஹாம்பர்க்
- இந்தியா
- ஜெர்மனி
- ஹாம்பர்க், ஜெர்மனி...
- தின மலர்
ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடந்து வந்த ஃபிரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபிரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடந்து வந்தன. துவக்க சுற்று போட்டிகளில் தொடர் தோல்விகள் அடைந்ததை அடுத்து, 7ம் இடத்துக்கான பிளேஆப் போட்டி நடந்தது. இதில், ஈரான் வம்சாவளி பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா பிரோஸ்ஜாவுடன் குகேஷ் மோதினார். இப்போட்டியில் பல தவறுகளை குகேஷ் செய்ததால் 30 நகர்த்தல்களில் அவர் தோல்வியை தழுவ நேர்ந்தது. இதனால் குகேஷ் ஒரு வெற்றி கூட பெற இயலாமல் 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இறுதிப்போட்டியில் ஜெர்மன் வீரர் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். உலக நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 3, உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சின்டாரோ 4, அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 5, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துல்சட்டோரோ 6, பிரான்ஸ் வீரர் அலிரெஸா பிரோஸ்ஜா 7ம் இடங்களை பிடித்தனர். குகேஷ் 8ம் இடத்தை பிடித்தபோதும், அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த வின்சென்ட் கீமருக்கு, ரூ.1.8 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.
The post ஃபிரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மன் வீரர் வின்சென்ட்: குகேஷுக்கு கடைசி இடம் appeared first on Dinakaran.