×

காசிக்கு சென்ற ரயிலில் அத்துமீறல் தமிழ்நாடு கலைஞர்கள் மீது தாக்குதல்

வாரணாசி: காசி தமிழ்ச்சங்கமம், கும்பமேளா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தமிழக -காசி சங்கமம் ஏற்பாட்டில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 700 நாட்டுப்புற கலைஞர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் காசிக்கு சென்றனர். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றடைந்தது. அப்போது 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர், தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் செய்த முன்பதிவு பெட்டியில் ஏறினர். இதற்கு நாட்டுப்புற கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வடமாநிலத்தவர் கும்பலாக சேர்ந்து நாட்டுப்புற கலைஞர்களை தாக்கியதுடன் ரயில் பெட்டி கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பினர். இதில் பலரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இந்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post காசிக்கு சென்ற ரயிலில் அத்துமீறல் தமிழ்நாடு கலைஞர்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kashi ,southern ,Nellai ,Tenkasi ,Thoothukudi ,Kumari ,Tamil Nadu-Kashi Sangamam ,Kashi Tamil Sangamam ,Kumbh Mela ,Chennai Central Railway Station ,
× RELATED மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு..!!