- முத்தரப்பு ஒருநாள் தொடர்
- பாக்கிஸ்தான்
- நியூசிலாந்து
- கராச்சி
- முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்
- தென் ஆப்பிரிக்கா
- நியூசிலாந்து
- தின மலர்
கராச்சி: பாகிஸ்தானில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வந்தது. லீக் சுற்றுகளில் முன்னிலை வகித்த பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இந்த அணிகள் இடையிலான இறுதிப் போட்டி நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. 49.3 ஓவர்களில் பாக். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன் எடுத்தது. இதையடுத்து, 243 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 45.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய நியூசியின் வில் ஓரூர்க்கி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். பாக்.கின் சல்மான் ஆகா தொடர் நாயகன். இந்த வெற்றியை அடுத்து, நியூசிலாந்து அணிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
The post முத்தரப்பு ஒரு நாள் தொடர்: பாக்.கை பதம் பார்த்து கோப்பை வென்ற நியூசி appeared first on Dinakaran.