சாந்திநிகேதன்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் புகழ்ந்துள்ளார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவரும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நெருங்கிய நண்பருமான அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மன்மோகன் சிங் ஒரு சிறந்த மனிதர், ஒரு நல்ல அரசியல் தலைவர். மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர். இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதம் இருப்பதற்கான சான்றுகள் உள்ளபோது கடுமையாக எதிர்வினையாற்றக்கூடாது என்பது அவருக்கு தெரியும். வெவ்வேறு நம்பிக்கைகள் இருப்பதை மனிதர்கள் அங்கீகரிப்பது முக்கியமாகும். நீங்கள் குறிப்பிட்ட நம்பிக்கையை ஆதரிக்கலாம். ஆனால் அது மற்றவற்றை இழிவுபடுத்துவதை தூண்டக்கூடாது. மன்மோகன் சிங் ஒரு சீக்கியராக இருந்தாலும், அந்த அடையாளம் அவருக்கு முக்கியமானது என்றாலும் அவர் மற்ற மதங்கள் மற்றும் சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு மரியாதையுடன் கட்டமைத்தார். மன்மோகனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் நண்பர் என்பதால் மட்டுமல்ல” என்றார்.
The post மன்மோகன் சிங் நல்ல அரசியல் தலைவர்: அமர்த்தியா சென் புகழாரம் appeared first on Dinakaran.