- டுவெய்லர் விபத்து
- தேவதானபட்டி, பிப்
- வீரபாண்டி
- திண்டுக்கல் மாவட்டம் கோடைக்கனல் மன்னவனூர், கும்பூர்
- தேவதானபட்டி கத்ரோட்
- முண்டினம்
- கத்ரோட்
- Duweiler
- தின மலர்
தேவதானப்பட்டி, பிப். 15: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர், கும்பூரைச் சேர்ந்தவர் வீரபாண்டி(18). இவர் தேவதானப்பட்டி காட்ரோடு அருகே உள்ள பிரபல ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் டூவீலரில் காட்ரோட்டில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் போது பின்னால் வந்த கார் மோதியதி விபத்து ஏற்பட்டது.
இதில் வீரபாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஓட்டல் மேலாளர் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த அரவிந்த்(30) புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மதுரை பொன்னேரியைச் சேர்ந்த பிச்சைமுத்து(34) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post டூவீலர் விபத்தில் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.