- மண்டபம்
- அரசு
- நகர்
- ராமநாதபுரம்
- கொப்பரிமடம்
- சித்தார்கோட்டை, தெர்போகி
- Panaikulam
- அழகன்கலம்
- அரண்மனை
- தின மலர்
மண்டபம், பிப்.15:ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து, அரசு நகர் பேருந்து புறப்பட்டு கோப்பேரி மேடம், சித்தார்கோட்டை ,தேர்போகி பகுதி பனைக்குளம் வழியாக அழகன்குளம் வரை வந்து மீண்டும் இதே வழியாக ராமநாதபுரத்திற்கு சென்றடைகிறது. இந்த பேருந்து அதிகாலையில் 4.50க்கு அரண்மனையில் புறப்பட்டு ஆறு மணிக்கு அழகன்குளம் வந்து சேரும். இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்வதற்கு வசதியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக, இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை, திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆதலால் நிறுத்தப்பட்ட இந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்குவதற்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மீண்டும் பேருந்து இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.
