- சென்னை
- அசாம் மாநில காவல்துறை
- கே பிரிவு காவல்துறை
- அபு சலம் அலி
- அன்சாருல்லா பங்களா
- அல் கொய்தா
- இந்தியா
- தின மலர்
சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான அல்கொய்தா அமைப்புடன் நேரடி தொடர்பில் உள்ள அன்சருல்ல பங்கலா குழுவை சேர்ந்த வங்கதேச தீவிரவாதி அபுசலாம் அலி என்பவர் சென்னை அருகே பதுங்கி இருப்பதாக அசாம் மாநில போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் கண்டுபிடித்தனர். அதை சென்னையில் உள்ள க்யூ பிரிவுக்கு தகவல் தெரியப்படுத்தினர். இதனை வைத்து க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தியபோது, தீவிரவாதி அபுசலாம் அலி, தாம்பரம் மாநகர காவல் எல்லையான செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் அருகே உள்ள ஒட்டியம்பாக்கம் அரசங்கழனி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அசாம் மாநில காவல்துறைக்கு க்யூ பிரிவு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அசாம் மாநில காவல்துறை அபுசலாம் அலியை கைது செய்தனர். அவரிடம் இருந்து சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாதி அபுசலாம் அலி எதற்காக தமிழகம் வந்தார், நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்பது குறித்து க்யூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கூலி தொழிலாளி போல் சென்னை அருகே பதுங்கியிருந்த வங்கதேச தீவிரவாதி கைது: க்யூ பிரிவு போலீசார் உதவியுடன் அசாம் மாநில போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.