சென்னை: காதலர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பலவிதமான ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலை சொல்ல காத்திருப்பவர்களும், காத்து கொண்டிருப்பவர்களுக்குமான பண்டிகையான காதலர்தினத்தை ஒட்டி சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் ரோஜாப்பூகளின் விற்பனை அதிகரித்துள்ளது. தாஜ்மஹால் ரோஜா, பிங்க் ரோஜா, ஆரஞ்சு ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளிட்ட வண்ணங்களில் மொத்தம் 15 டன் ரோஜாக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
20 பூக்கள் கொண்ட தாஜ்மஹால் ரோஜா ரூ.450 வரையிலும் பிங்க் ரோஜா ரூ.400 வரையிலும், ஆரஞ்சு ரோஜா ரூ.350 க்கும் விற்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையிலும் ராஜாக்களின் விலை உயர்ந்துள்ளது. பார்வையாளர்களை கவரும் ஸ்டெம்ப் ரோஜா, தாஜ்மஹால் ரோஜா ஆகியவை சில தினங்களுக்கு முன்பு தலா 1 ரூ.5 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மொத்த விலையில் ரூ.25 ஆகவும் சில்லறை விலையில் ரூ.30 ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை மலர்சந்தையில் கடந்த 4 நாட்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா பூங்கொத்துகள் விற்பனையாகி உள்ளன. இன்றைய காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்காக ரோஜா பூக்களை கொண்டு சிறப்பு மாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் போன்கள் மூலம் காதலர்கள் பலரும் அளிக்கும் ஆர்டர்களால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மலர்சந்தையில் ரோஜா உள்ளிட்ட மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரோஜா பூ ஒரு கட்டு ரூ.500 வரை விற்கப்படுகிறது. காதலர்தினத்தை ஒட்டி ரோஜா பூக்கள் மட்டுமல்லாது. உதகையில் சாக்லேட்களின் விற்பனையும் களைகட்டி உள்ளது. அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதயவடிவ சாக்லேட்கள் காதல் ஜோடிகளை பிரதிபலிக்கும் சாக்லேட்கள், சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான சாக்லேட்களை அதிக வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். விற்றுத்தீரும் ரோஜா பூக்களும், சாக்லேட்களும் காதலர்தினம் களைகட்டி உள்ளதை அறிமுகப்படுத்துகிறது.
The post தோவாளை மலர் சந்தையில் ரோஜாக்கள் விற்பனை அமோகம்: காதலர் தினத்தையொட்டி ஒரு கட்டு ரூ.500க்கு விற்பனை appeared first on Dinakaran.
